நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நடப்பாண்டு 13வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரவு ஆட்டம் 7.30 மணிக்கு தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், வழக்கம் போல் 8 மணிக்கே போட்டி தொடங்கும் எனத் தெரிவித்தார்.
அதேபோல், இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறலாம் என தகவல் வெளியான நிலையில், மும்பையில்தான் நடைபெறும் என கங்குலி அறிவித்தார். இந்த முறை ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடத்தப்படும் முறையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், தலையில் பந்து தாக்கி காயமடையும் வீரருக்கு பதில் மாற்றுவீரரை களமிறக்கும் முறை அறிமுகபடுத்தப்படும் என்றும் கூறினார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.