ஐ.பி.எல். தொடரில் இருந்து ரத்தாகிறது சர்ச்சைக்குரிய மான்கட் அவுட்!

#Dhoni, #Kohli against #mankad in #IPL: #RajivShukla | அஸ்வின் செய்த மான்கட் அவுட், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

Web Desk | news18
Updated: March 26, 2019, 7:10 PM IST
ஐ.பி.எல். தொடரில் இருந்து ரத்தாகிறது சர்ச்சைக்குரிய மான்கட் அவுட்!
பட்லரை அவுட்டாக்கிய அஸ்வின். (IPL)
Web Desk | news18
Updated: March 26, 2019, 7:10 PM IST
‘மான்கட்’ முறையில் நான்-ஸ்டிரைக்கரை ஆட்டமிழக்கச் செய்யும் முறையை ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை, மான்கட் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதில், அஸ்வின் பந்துவீசும்போது நான் ஸ்ட்ரைக்கர் பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றதால், பந்துவீசுவதை நிறுத்திய அஸ்வின் ரன் அவுட் செய்தார்.அஸ்வின் செய்த மான்கட் அவுட், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது. ஐ.பி.எல் போட்டிகளில் மான்கட் முறை பயன்படுத்துவதற்கு சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனியும், ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலியும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Rajiv Shukla, ராஜீவ் சுக்லா
ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லா. (AFP)


இதுகுறித்து சுக்லா தனது ட்விட்டரில் கூறுகையில், “ஐ.பி.எல் போட்டிகளில் மான்கட் முறையில் நான்-ஸ்டிரைக்கரை பந்துவீச்சாளர் ஆட்டமிழக்கச் செய்யும் முறையை தவிர்க்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்டது. கொல்கத்தாவில் நடந்த இந்தக் கூட்டத்தில் அணியின் கேப்டன்கள், போட்டி நடுவர்கள் பங்கேற்றனர். கோலி, தோனி ஆகியோரும் கலந்துகொண்டனர்” என தெரிவித்தார்.மற்றொரு பதிவில், “அந்த கூட்டத்தின் முடிவில் நான்-ஸ்டிரைக்கர் கிரீஸுக்கு வெளியே இருக்கும்போது மான்கட் அவுட் முறையில் பந்துவீச்சாளர் ரன் அவுட் செய்ய கூடாது. ஒரு மரியாதையை கடைபிடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது” என சுக்லா குறிப்பிட்டுள்ளார்.ஐ.பி.எல் போட்டியின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த முறையை நீக்க வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், விரைவில் இந்த முறை ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து நீக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ரசிகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய தல தோனி!

அஸ்வின் செய்தது அவுட்டாக்கியது சரியா? தவறா? கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து!

VIDEO: டேபிள் டென்னிஸ் போட்டியிலும் கலக்கும் தல தோனி!

விக்கெட் எடுத்த அஸ்வின்... கடுப்பான பட்லர்!

Also Watch..

First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...