• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • #IPLAuction: 7 விதமாக ஸ்பின் வீசும் வருண் சக்கரவர்த்தி கடந்து வந்த பாதை!

#IPLAuction: 7 விதமாக ஸ்பின் வீசும் வருண் சக்கரவர்த்தி கடந்து வந்த பாதை!

வருண் சக்ரவர்த்தி. (TNPL)

வருண் சக்ரவர்த்தி. (TNPL)

IPL Auction Who is Varun Chakkaravarthy? | 2018 டி.என்.பி.எல் இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வருண் வீழ்த்தினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    2019 ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் ரூ. 8.40 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

    தஞ்சாவூரைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தனது 13 வயதில் இருந்து கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் தனது 17 வயது வரை வருண் பந்துவீசியதே இல்லை. ஏனென்றால், அப்போது அவர் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாகவே விளையாடி வந்தார்.

    ஒருகட்டத்தில் சரியான வாய்ப்புக் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த வருண், சென்னையை அடுத்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பொறியாளர் படிப்பில் சேர்ந்தார். 5 ஆண்டு கால படிப்பிற்குப்பின், கட்டடக்கலைத் துறையில் பகுதி நேர வேலை செய்து வந்தார். வேலை போக மீதமுள்ள நேரத்தில் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தபோது, அவருக்குள் இருந்த கிரிக்கெட் ஆர்வம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.

    மைஸ்ட்ரி ஸ்பின்னரான வருண்:

    தொடக்கத்தில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். பின்னர், க்ளப் அணிகளில் சேர்ந்து விக்கெட் கீப்பிங்கை கைவிட்டு, பந்து வீச்சாளராக விளையாட ஆரம்பித்தார். முதலில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த இவர், அடிக்கடி ஏற்படும் காயத்தால் ஸ்பின்னராக மாறினார்.

    2017-18-ல் நடந்த சென்னை லீக் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வருண் வீழ்த்தினார். அதன்பிறகு அணி நிர்வாகிகளின் பார்வை அவர் மீது விழத்தொடங்கியது. இதன்மூலம், விஜய் ஹசாரே தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

    சாதாரண சுழற்பந்து வீச்சாளர்கள் போல் ஒரு சில ஸ்டைலில் இல்லாமல், 7 விதமாக பந்துவீசுவதில் கைசேர்ந்தவரானார். ஆஃப் ப்ரேக், லெக் ப்ரேக், கூக்ளி, கேரம் பால் உள்ளிட்ட பல விதமாக பந்துவீசி பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.

    2018 டி.என்.பி.எல் தொடரில் வாய்ப்பு:

    2018 தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மதுரை பேந்தர்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை சாம்பியன் கோப்பையை வெல்லாத மதுரை அணி, 2018-ல் சாம்பியனானது. இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வருண் வீழ்த்தினார்.

    2019 ஐ.பி.எல் தொடரில் அறிமுகம்:

    கடந்த ஐ.பி.எல் தொடரின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்களுக்கு வலைப்பயிற்சியின்போது வருண் பந்துவீசியுள்ளார். அவரின் பந்துவீச்சு அனைவரையும் ஈர்த்துள்ளது.

    பின்னர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக வலைப்பயிற்சியில் பந்துவீசியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, ஐ.பி.எல் ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

    IPL Auction Live Updates in  Tamil:  ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் தொடர்பான செய்திகள் உடனுக்குடன் நேரலையாக...

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: