#IPLAuction: சென்னை அணியில் மீண்டும் மோஹித் சர்மா!

IPL Auction 2019 Live Updates with News18 Tamil: Mohit sharma is up next and is sold to Chennai Super Kings | 2013 - 2015-ம் ஆண்டு வரை சென்னை அணிக்காக மோஹித் சர்மா விளையாடி இருந்தார் | Watch 2019 IPL Auction Online Streaming on Hotstar App and TV Coverage on Star Sports Network.

#IPLAuction: சென்னை அணியில் மீண்டும் மோஹித் சர்மா!
மோஹித் சர்மா
  • News18
  • Last Updated: December 18, 2018, 5:47 PM IST
  • Share this:
2019 ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் பந்துவீச்சாளர் மோஹித் சர்மா ரூ.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

12-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலம் வரும் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. முன்னணி வீரர்கள் குறைவாக இருப்பதால் தொடக்கத்தில் சற்று மந்தமாக இருந்தது. ஏலத்தில், ரூ.50 லட்சம் அடிப்படை விலையைக் கொண்ட புஜாரா, மனோஜ் திவாரி ஆகிய இருவரையும் யாரும் வாங்கவில்லை.

ஹனுமா விஹாரியை ரூ. 2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஹெட்மேயர் ரூ. 4.2 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வாங்கின. மூத்த வீரர்களான மெக்கல்லம், கப்தில் உள்ளிட்டோர் விலை போகவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ராத்வெய்ட்டை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வாங்கியது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலை ரூ. 5 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. ரூ.1 கோடி ஆரம்ப விலையாகக் கொண்ட மூத்த வீரர் யுவராஜ் சிங்கை வாங்க யாரும் முன்வரைவில்லை. கடந்த ஐ.பி.எல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன உனத்கட், இந்தமுறை ராஜஸ்தான் அணியால் ரூ. 8.40 கோடிக்கு வாங்கப்பட்டார்.



இதனை அடுத்து, பந்துவீச்சாளர் மோஹித் சர்மாவை ரூ.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. முன்னதாக, 2013-ம் ஆண்டு வரை 2015-ம் ஆண்டு வரை சென்னை அணிக்காக அவர் விளையாடி இருந்தார். இந்நிலையில், மீண்டும் சி.எஸ்.கே அணிக்கு திரும்பியுள்ளார்.

Also Watch...

First published: December 18, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்