LIVE NOW

LIVE IPL Auction 2019: யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பளித்த மும்பை இந்தியன்ஸ்

IPL Auction 2019 Live Updates with News18 Tamil | ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் தொடர்பான செய்திகள் உடனுக்குடன் நேரலையாக...

Tamil.news18.com | December 18, 2018, 9:32 PM IST
facebook Twitter google Linkedin
Last Updated December 18, 2018
auto-refresh

Highlights

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டிக்கு, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது.

ஏலத்திற்கு முன்பே, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்தன. இந்த ஏலத்தில் பங்கேற்க 1,003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

அணிகளின் நிர்வாகிகள் அளித்த விருப்பத்தின் அடிப்படையில் மொத்தம் 346 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் தயாராக உள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் போது ஐ.பி.எல் போட்டி நடக்கும் என்பதால், இதுவரை போட்டி நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.

இதே போன்ற சூழலில் 2 முறை தென்னாப்பிரிக்கா மற்றும் துபாயில் ஐ.பி.எல் தொடர்கள் நடந்தது.
Load More