IPL Auction 2019: நாளை ஐ.பி.எல் வீரர்கள் ஏலம்! எங்கே? எப்போது?

#IPLAuction 2019: Date, Time, Venue | 2019 ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 346 பேர் பங்கேற்க உள்ளனர். #IPL2019 #CSK #Jaipur

IPL Auction 2019: நாளை ஐ.பி.எல் வீரர்கள் ஏலம்! எங்கே? எப்போது?
வீரர்கள் ஏலம் விடும் புகைப்படம் (BCCI)
  • News18
  • Last Updated: December 17, 2018, 9:30 PM IST
  • Share this:
2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது.

வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரானது, கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன.

12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் டிசம்பர் 18-ம் தேதி பெங்களூருவில் நடத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது. ஏலத்திற்கு முன்பே, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்தன.


Chennai Super Kings, CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK/Twitter)


ஜெய்ப்பூரில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க 1,003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அணிகளின் நிர்வாகிகள் அளித்த விருப்பத்தின் அடிப்படையில் மொத்தம் 346 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் மொத்தம் 70 வீரர்களே தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில், இந்தியாவைச் சேர்ந்த 50 வீரர்களும், வெளிநாட்டுகளைச் சேர்ந்த 20 வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
RCB, IPL
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. (BCCI)


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மார்க் உட், கனிஷ்க் சேத், ஷிடிஸ் சர்மா ஆகிய வீரர்களை நீக்கியுள்ளது. அந்த அணியால், ஏலத்தில் அதிகபட்சம் ரூ.8.40 கோடிக்கு 2 இந்திய வீரர்களை மட்டும் எடுக்க முடியும். மற்ற அணிகளின் கையிருப்பை பொறுத்து வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவர். பெரும்பாலான வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். அதனால், இந்த ஏலத்தில் விறுவிறுப்பு இருப்பது சந்தேகம்தான்.

Also Watch...

First published: December 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்