முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : சென்னை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்… அனைத்து போட்டிகளிலும் இடம்பெறுவாரா பென் ஸ்டோக்ஸ்?

IPL 2023 : சென்னை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்… அனைத்து போட்டிகளிலும் இடம்பெறுவாரா பென் ஸ்டோக்ஸ்?

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

தோனிக்கு பின்னர் கேப்டன் பொறுப்பு ஸ்டோக்சிற்கு வழங்கப்படலாம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து போட்டிகளிலும் இடம்பெறுவாரா என்பது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை சென்னை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளன. ஐபிஎல் நடப்பு சீசன் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த முறையும் சென்னை அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்படவுள்ளார். இந்த போட்டியுடன், தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்தான் தோனி விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி நிர்வாகம் ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. தோனிக்கு பின்னர் கேப்டன் பொறுப்பு ஸ்டோக்சிற்கு வழங்கப்படலாம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி பகுதியில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதால், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்லின் கடைசி சில ஆட்டங்களில் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

First published:

Tags: Cricket, IPL 2023