ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் தொடர் : சென்னை, மும்பை அணிகளில் முக்கிய வீரர்கள் விடுவிப்பு? - யாரெல்லாம் தெரியுமா?

ஐபிஎல் தொடர் : சென்னை, மும்பை அணிகளில் முக்கிய வீரர்கள் விடுவிப்பு? - யாரெல்லாம் தெரியுமா?

ஐபிஎல்

ஐபிஎல்

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த பட்டியலை அணிகள் சமர்பித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மும்பை மற்றும் சென்னை அணியில் இருந்து பல முக்கிய வீரர்களை விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

  2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வரும் டிசம்பர் 23ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மினி ஏலத்திற்காக ஒவ்வோர் அணியும் தாங்கள் விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

  இதனால் அணியில் யாரை விடுவிப்பது குழப்பங்களால் அனைத்து ஐபிஎல் அணிகளும் இதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பல முக்கிய வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வந்த மேற்கு இந்திய தீவுகள் அணி ஆல்ரவுண்டர் பொல்லார்டு மினி ஏலத்தில் விட அந்த அணி முடிவு செய்து  விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  இதையும் படிங்க: இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர் : பதிலடி கொடுத்த இர்பான் பதான்!

  மேலும் மும்பை இந்தியனஸ் அணியில் மயங்க் மார்க்கண்டே, டைமல் மில்ஸ், பெபியன் ஆலென், ஹிரித்திக் செளகின் உள்ளிட்ட வீரர்களை அணியில் இருந்து மும்பை அணி நிர்வாகம் விடுத்துள்ளது. அதேபோல பெங்களூரு அணியில் இருந்து ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பென் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃபை மும்பை அணி டிரேட் செய்துள்ளது.

  அதேபோல் குஜராத் அணியில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசேன் , ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் உள்ளிட்ட இரண்டு வீரர்களை கொல்கத்தா அணி டிரேடிங் செய்துள்ளது.

  சென்னை அணியை பொறுத்தவரை நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாட மாட்டார் என செய்திகள் வெளியான நிலையில், அவரை சென்னை அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளது. மேலும் கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, மிட்செல் சாண்ட்னெர் உள்ளிட்டோரை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chennai Super Kings, IPL, Mumbai Indians