IPL Auction Live: சிஎஸ்கே அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட புதிய வீரர்கள் விவரம்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | December 23, 2022, 20:45 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    20:55 (IST)

    ரூ.167 கோடி செலவில் 80 வீரர்கள் ஏலம்

    கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டது

    20:48 (IST)

    நிறைவடைந்தது ஐபிஎல் மினி ஏலம்

    கொச்சியில் கடந்த 6 மணி நேரமாக நடைபெற்று வந்த ஐபிஎல் மினி ஏலம் நிறைவு பெற்றது

    20:44 (IST)

    ஷாகிப் ஆல் ஹாசனை விலைக்கு வாங்கியது கொல்கத்தா 

    வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் ஆல் ஹாசனை முதல் சுற்றில் எந்த ஒரு அணியும் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் , அடுத்த சுற்றில் ரூ.1.50 கோடிக்கு விலைக்கு வாங்கியது கொல்கத்தா அணி

    20:43 (IST)

    ஐபிஎல் தொடரில் முதன் முறையாக களமிறங்கும் ஜோ ரூட்

    இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் முதல் சுற்றில் விலை போகாத நிலையில் அடுத்த சுற்றில் ராஜஸ்தான் அணி வாங்கியது. ரூ.1 கோடிக்கு வாங்கியதன் மூலம் முதன் முறையாக ஐபிஎல் தொடரில் ஜோ ரூட் களமிறங்க உள்ளார்

    20:31 (IST)

    ஐபிஎல் 2023க்கான சென்னை அணி:

    தோனி, கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா

    மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்

    பென் ஸ்டோக்ஸ், ரஹானே, அடில் ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா,

    20:25 (IST)

    ஐதராபாத் அணியில் அகேல் ஹொசின் 

    மேற்கு இந்திய வீரர் அகேல் ஹொசினை ஐதராபாத் அணி ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது

    20:22 (IST)

    லிண்டன் தாஸ் ஏலம் போனார்

    வங்கதேச வீரர் லிண்டன் தாஸை முதல் சுற்றில் எந்த ஒரு ஐயும் ஏலம் எடுக்காத நிலையில் இரண்டாவது சுற்றில் கொல்கத்தா அணி ரூ.50 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியது

    20:20 (IST)

    டெல்லி அணியில் ரிலீ ரோசோவ்

    முதல் சுற்றில் ஏலம் போகாத தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் ரிலீ ரோசோவ் இரண்டாவது சுற்றில் ரூ.4.60 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது

    20:18 (IST)

    இரண்டாவது முறையில் ஏலம் போன ஆடம் ஜாம்பா

    முதல் சுற்றில் ஏலம் போகாத ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா 2வது சுற்றில் விலை போனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அண் ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது

    20:11 (IST)

    பென் ஸ்டோக்ஸை வித்தியசமாக வரவேற்ற சென்னை அணி