முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் தொடருக்கு தயாராகும் குஜராத் டைட்டன்ஸ்… சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு…

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் குஜராத் டைட்டன்ஸ்… சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு…

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா

கடந்த ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி பட்டத்தை கைப்பற்றியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தயாராகி வருகிறது. இதையொட்டி 5 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி முகாமை அந்த அணி நடத்தி முடித்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் 7 பேர், அணியின் உதவியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த சிறப்பு பயிற்சி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியை கடந்த ஐபிஎல் தொடரின்போது தான் அறிமுகமானது.

ஆனால் அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கிரிக்கெட் ரசிகர்களை குஜராத் அணி வியப்பில் ஆழ்த்தியது. இதன் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். தலைமை பயிற்சியாளர் பொறுப்பு இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி முகாம் குறித்து குஜராத் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி கூறியதாவது- நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு 2 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதையொட்டி சிறப்பான பயிற்சியை மேற்கொள்ள நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதனை தொடங்கும் வகையில் இந்த 5 நாள் முகாம் நடத்தப்பட்டுள்ளது. மிகுந்த பலன் அளிக்கும் வகையில் இந்த முகாமை, குஜராத் டைட்டன்ஸ் நடத்தி முடித்துள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி பட்டத்தை கைப்பற்றியது. இந்த கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 14 போட்டிகளில் 10-இல் வெற்றி பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், டேவிட் மில்லர், ரஷீத் கான், முகமது சமி, கேன் வில்லியம்சன், கே.எஸ்.பரத், ஒடியான் ஸ்மித் ஆகியோர் முக்கிய ஆட்டக்காரர்களாக உள்ளனர்.

First published:

Tags: Cricket