ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் தொடருக்காக பயிற்சியை தொடங்கி தோனி… வைரலாகும் புகைப்படங்கள்…

ஐபிஎல் தொடருக்காக பயிற்சியை தொடங்கி தோனி… வைரலாகும் புகைப்படங்கள்…

தோனி

தோனி

ஐபிஎல் தொடரில் தற்போது வரை தோனி 234 போட்டிகளில் விளையாடி 4,978 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 24 அரைச் சதங்கள் அடங்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சியை தொடங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பானஅதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளது. இந்த தொடரில் 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இவை அனைத்திற்கும் தோனியே கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில் வரவிருக்கும் சீசனுக்காக தோனி பயிற்சியை தொடங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சை சென்னை அணி எடுத்துள்ளது. வீரர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது சென்னை அணி பேட்டிங்கில் வலிமையாக காணப்பட்டாலும், திறமையான பவுலர்கள் குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய அணிக்காக தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,876 ரன்களை எடுத்துள்ளார். இதில் 6 சதங்களும் ஒரு இரட்டை சதமும் அடங்கும். இதேபோன்று 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 10,773 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 87.56. ஐபிஎல் தொடரில் தற்போது வரை தோனி 234 போட்டிகளில் விளையாடி 4,978 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 24 அரைச் சதங்கள் அடங்கும்.

First published:

Tags: Cricket