பும்ராவைப் பற்றி முதலில் கேள்விப்பட்ட பிறகு கோலியின் எதிர்வினை முற்றிலும் மட்டம்தட்டுவதாகவே இருந்தது. முன்னாள் இந்திய விக்கெட் கீப்பரும் முன்னாள் ஆர்சிபி வீரருமான பார்த்தீவ் படேல், பும்ராவை தனது முன்னாள் கேப்டனான கோலியிடம் சேர்த்துக்கொள்ளும் யோசனையை தெரிவித்ததாகவும், ஆனால் விராட் அவருக்கு ஒரு வாய்ப்பை கூட வழங்க மறுத்துவிட்டதாகவும் பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கீழ் துணை கேப்டனாக உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) தரவரிசை ஏணியில் மேலேறி வந்த பும்ரா உலகின் முதன்மையான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. கோலியே அதன் பிறகு அவரை புகழ்ந்து தள்ளினார் என்பதில் ஐயமில்லை.
ஆனால் பும்ராவின் ஆரம்பக் கட்டத்திலேயே அவரது திறமைகளை முன் உணர்ந்தவர் பார்த்திவ் படேல்தான். தோனியின் கீழ் இந்தியாவில் அறிமுகமான பிறகு, பும்ரா விராட் கோலியின் தலைமையில் ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளராக மாறினார். பும்ராவின் பெரும் ஆதரவாளரான கோலி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் மீதான அவரது அபிமானத்தின் ஒரு பகுதியாக பிரபலமான கவர்ச்சிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதையும் அவரது செயல்களைத் தானே செய்து காட்டியும் அவரை அரவணைத்தார் கோலி.
இந்நிலையில் முதன் முதலில் பும்ரா பற்றி பார்த்திவ் படேல் கோலியிடம் தெரிவிக்கும் போது கோலி என்ன சொன்னார் என்பதை பார்த்திவ் படேல் புட்டு புட்டு வைத்த போது, “2014ல், நான் ஆர்சிபியில் இருந்தபோது, பும்ரா என்ற இந்த பந்துவீச்சாளர் இருக்கிறார் என்று கோஹ்லியிடம் கூறினேன். அவரைப் பாருங்கள். அதற்கு பதிலளித்த விராட், ‘சோர் நா யார். யே பும்ரா-வும்ரா க்யா கரேங்கே?’ (அதை விடுங்கள். அத்தகைய வீரர்கள் என்ன செய்வார்கள்?") என்றார் என்னிடம் கோலி, என்றார் பார்த்திவ் படேல்.
பார்திவ் குஜராத் அணியில் பும்ராவின் கேப்டனாக இருந்தார் மற்றும் அவரது எழுச்சியை நேரடியாக பார்த்தார். அவர் மேலும் கூறும்போது, “"அவர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பும்ரா முதல் 2-3 ஆண்டுகள் ரஞ்சி டிராபியில் விளையாடினார். 2013 அவருக்கு முதல் வருடம், 2014ல் அவருக்கு நல்ல சீசன் இல்லை. 2015ல் அது மிகவும் மோசமாக இருந்ததால், அவரை சீசனின் நடுப்பகுதியில் வீட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று விவாதம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், அவர் மெதுவாக முன்னேறத் தொடங்கினார், மும்பை இந்தியன்ஸ் அவரை ஆதரித்தது. அவரது சொந்த கடின உழைப்பு மற்றும் அத்தகைய ஆதரவுதான் அவருக்குள் சிறந்ததை வெளிப்படுத்தியது” என்கிறார் பார்த்திவ் படேல்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.