IPL 2022 GT vs MI-பேட்டர்களால் தோற்றோம்- என்ன கூற வருகிறார் ஹர்திக் பாண்டியா?
IPL 2022 GT vs MI-பேட்டர்களால் தோற்றோம்- என்ன கூற வருகிறார் ஹர்திக் பாண்டியா?
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று 5 ரன்களில் தோல்வியடைந்ததையடுத்து 3வது தோல்வியை அடைந்தது குஜராத் டைட்டன்ஸ், அதில் ஏதாவது மனக்குழப்பம் ஏற்பட்டு விட்டதா என்று தெரியவில்லை, கேப்டன் ஹர்திக் பாண்டியா என்ன சொல்லியிருக்க வேண்டும்? பேட்டிங்கில் நான் உட்பட சரியல்ல, மிடில் ஆர்டர் பலவீனம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

மாறாக பேட்டர்களால் தோற்றோம் என்கிறார், சேஸ் செய்து தோல்வி நிலையிலிருந்து வெற்றி பெற்ற போது அதைச் சாதிக்கும் தனிப்பட்ட வீரர்களைக் குறிப்பிடாமல் இத்தகைய சூழ்நிலைகளை அணி கூட்டத்தில் விவாதிக்கிறோம் அதற்கேற்ப ஆடுகிறோம், திட்டமிடுகிறோம் என்று டீம் முயற்சி போல் தன்னையும் அதில் சேர்த்துக் கொள்கிறார்.
நேற்று பேட்டிங்கில் சஹா தொடர்ந்து தனது அரிய பங்களிப்பை செய்தார், ஷுப்மன் கில் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஒரு விரைவு அரைசதத்தை எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கேப்டன் என்ன சொல்லியிருக்க வேண்டும், ‘சஹா அடிக்கட்டும் ரிஸ்க் எடுக்கட்டும் ஷுப்மன் நீ கடைசி வரை நில்’ என்று கூற வேண்டாமா பாண்டியா பெவிலியனில் மீசையின் ஓரத்தைக் கடித்துக் கொண்டிருந்தால் எப்படி?
கடைசியில் தோற்று விட்டு ‘பேட்டர்கள் சரியில்லையாம்’, எந்த பேட்டர்கள்? சரி அவர் கூறுவதையே கேட்போம்: “மற்ற எந்த நாளிலும் கடைசி ஓவரில் 9 ரன்களை எடுத்து முடித்திருப்போம். 2 ரன் அவுட்கள் (பாண்டியா, திவேத்தியா) ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்து விட்டது.
பேட்டர்கள்தான் எங்களை கைவிட்டு விட்டனர் என்று கருதுகிறேன். டி20 போட்டிகளில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோற்கக்கூடாது. யாரையும் குறைகூறும் படலம் இல்லை. நாங்கள் அதைக் கடந்து வந்து விட்டோம். நாங்கள் செய்த தவறுகள்தான் எங்கள் தோல்விக்குக் காரணம். எங்கள் இன்னிங்சில் 19.2 ஓவர் வரை நல்ல கிரிக்கெட்டைத்தான் ஆடினோம்.
ஒன்று அல்லது இரண்டு பெரிய ஹிட்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக எங்களுக்கு முடித்திருக்கும். கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுத்து வந்திருக்கக் கூடாது முன்னமேயே முடித்திருக்க வேண்டும்.
ஆனால் பவுலர்கள் பிரமாதம், மும்பையை 170 ரன்களுக்குக் குறுக்கினோம். அவர்கள் 200 ரன்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் என்பதுதான் உண்மை.” இவ்வாறு கூறினார் ஹர்திக் பாண்டியா.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.