தோனிக்கும் கம்பீருக்கும் இடையே எந்த வித பிரச்சனைகளும் இல்லாவிட்டாலும் ஒருமுறை ஐசிசி 2011 உலகக்கோப்பை வென்றதன் தினத்தில் தோனி அடித்த அந்த பைனல் சிக்ஸை போட்டு பதிவிட்டிருந்தனர். இதில் கம்பீர் கடுப்பாகி விட்டார், உண்மைதானே அந்த இன்னிங்சில் அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்தது கம்பீர்தானே.
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் நடைபெறும் நிலையில் அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகத்துக்கு கொடுக்க இன்றே கடைசி நாள். சிஎஸ்கே அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ், கெய்க்வாட், மொயின் அலியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் வீரரும் பாஜக எம்.பி.யுமான கம்பீர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சென்னை அணி எந்த 4 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர் ஜடேஜா, டுபிளஸிஸ், சாம் கரண் ஆகிய 4 வீரர்களை மட்டும் தான் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றும் மற்றவர்களை ஏலத்தில் தேர்வு செய்து கொள்ளலாம் என்று கம்பீர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டோனியின் பெயரை கம்பீர் குறிப்பிடவில்லை. டோனியின் பார்ம் சற்று பாதிக்கப்பட்டு இருந்தாலும், அணியை வழிநடத்தி முக்கிய போட்டிகளில் ரன் குவித்துவிடுவார். சென்னை அணி நிர்வாகமே டோனியை தான் தாங்கள் முதல் வீரராக தக்க வைப்போம் என்று கூறிய பிறகும் கம்பீர் வேண்டும் என்றே, அவர் பெயரை குறிப்பிடாமல் விட்டுள்ளார்.
இதனையடுத்து தோனியை பிடிக்கவில்லை என்ற காரணத்துக்காக கம்பீர் அவர் பெயரை குறிப்பிடவில்லை, கம்பீருக்கு தோனி மீது பொறாமை என்றெல்லாம் நெட்டிசன்களும் தல ரசிகர்களும் கம்பீர் மீது பாய்ந்து வருகின்றனர்.
ஐபிஎல் அணிகளும் தக்க வைத்த வீரர்களும்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜடேஜா, தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - கேன் வில்லியம்சன்
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா
ஆர்சிபி: விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல்
டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பண்ட், அக்சர் படேல், பிரிதிவி ஷா, ஆன்ர்டி நார்ட்யே.
ராஜஸ்தான் ராயல்ஸ்- சஞ்சு சாம்சன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gautam Gambhir, IPL Auction, MS Dhoni