Home /News /sports /

IPL 2022: அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் நிலை என்ன?- வருவாரா மாட்டாரா?

IPL 2022: அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் நிலை என்ன?- வருவாரா மாட்டாரா?

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

தீபக் சாஹர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் 8 வாரகால மறு புனர் சிகிச்சை பெற்று வருகிறார், சிஎஸ்கே அணி அதிக விலை கொடுத்த வீரரை மீண்டும் விரைவில் பயிற்சியில் ஈடுபடுத்த விரும்புகிறது.

  இந்தியன் பிரீமியர் லீக் 2022 க்கு சிஎஸ்கே அணிக்கு இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஏப்ரல் மாதத்தின் மத்தியில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2022 ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட சாஹர், சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரின் போது காயமடைந்து தற்போது பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் புனர் சிகிச்சை பெற்று வருகிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, சாஹர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட மாட்டார், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு ஏப்ரல் நடுப்பகுதியில் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது சாஹர் தனது வலது காலில் தசை இழுப்பினால் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதுவரை, கைல் மேயர்ஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகிய இரு விண்டீஸ் பேட்டர்களை அவுட் ஆக்க அற்புதமாக பந்துவீசியிருந்தார். அவர் பின்னர் இலங்கை தொடரில் காயத்தினால் ஆடவில்லை. இப்போது ஐபிஎல் 2022-ன் பெரும்பகுதியை இழக்கிறார்.

  இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இஷான் கிஷானுக்குப் பிறகு அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் தீபக் சாஹர். அவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் துரத்தியது, அதற்கு முன்பு அவரை சிஎஸ்கே அதிக தொகைக்கு கைப்பற்றியது. இது குறித்து சிஎஸ்கேவுக்கு இப்போது அவர் காயமடைந்திருப்பதால் வருத்தம் ஏற்பட்டிருக்கும். ஷாரூக்கான் போன்றவரை பிடித்துப் போட்டிருந்தால் ஆல்ரவுண்டராகவும் இருப்பார், அதிரடி வீரராகவும் பினிஷராகவும் இருந்திருப்பார்.

  தீபக் சாஹர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் 8 வாரகால மறு புனர் சிகிச்சை பெற்று வருகிறார், சிஎஸ்கே அணி அதிக விலை கொடுத்த வீரரை மீண்டும் விரைவில் பயிற்சியில் ஈடுபடுத்த விரும்புகிறது.

  மார்ச் 23 ஆம் தேதி போட்டி தொடங்கும் முன் தங்கள் பயிற்சி முகாமை தொடங்கிய முதல் அணி தோனி படை CSKஆகும். மஞ்சள் படை மார்ச் 26 அன்று வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக தங்கள் முதல் போட்டியில் ஆடுகின்றனர். நடப்பு சாம்பியன்கள் B- பிரிவில் இடம் பெற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் புதிய உரிமையாளரான குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிகளுடன் சிஎஸ்கெ உள்ளது.

  சாஹரைத் தவிர, அம்பதி ராயுடு மற்றும் டுவைன் பிராவோ உள்ளிட்ட மற்ற முன்னாள் வீரர்களையும் CSK மீண்டும் அணியில் இணைத்துள்ளது.

  2022 ஐபிஎல் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் முந்தைய சீசனின் இறுதிப் போட்டியாளர்களான சிஎஸ்கே மற்றும் கேகேஆர் இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது.

  மார்ச் 27, ஞாயிற்றுக்கிழமை, மும்பையின் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் இதே நாள் மாலையில், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DY பாட்டீல் ஸ்டேடியத்தில் மோதுகிறது.
  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, IPL 2022

  அடுத்த செய்தி