IPL 2021 Schedule | ஐபிஎல் 2021 போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வ வெளியீடு - சென்னையில் முதல் போட்டி

IPL 2021 Schedule  | ஐபிஎல் 2021 போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வ வெளியீடு - சென்னையில் முதல் போட்டி

ஐ.பி.எல்

ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் 2-வது போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

  • Share this:
    ஐ.பி.எல் 2021 போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் தொடக்க போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் 2-வது போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

    கொரோனா வைரஸ் காரணமாக கடந்தாண்டு ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இந்தாண்டு இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த பிசிசிஐ முனைப்பு காட்டி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி ஐ.பி.எல் தொடர் நடைபெற உள்ளது. ஆனால் அனைத்து உள்ளூர் அணிகள் மோதும் போட்டியும் வேறு மாநில மைதனாத்தில் நடைபெறுவது போன்று அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.





    சென்னையில் போட்டிகள் நடைபெற்றாலும் சி.எஸ்.கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவில்லை. மும்பை, பெங்களூரு, கொல்கத்தாவில் மட்டுமே சி.எஸ்.கே போட்டிகள் நடைபெற உள்ளது. இதேப் போன்று மற்ற அணிகளுக்கும் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

     



    ஐ.பி.எல் 2021  தொடரின் ப்ளே ஆஃப் மற்றும்  இறுதிப்போட்டி அகமாதபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்றும் அறிவிக்ப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published: