மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு... ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? கங்குலி பதில்

மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு... ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? கங்குலி பதில்

சவுரவ் கங்குலி.

ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் வார இறுதி நாட்களில் மீண்டும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் கிழமை காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 ஐ.பி.எல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்த வாரம் சனிக்கிழமை மும்பை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி நடைபெறுகிறது. சி.எஸ்.கே அணி மோதும் முதல் 5 போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.

  கொரோனா ஊரடங்கால் ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என கேள்வி எழுந்த நிலையில் குறித்த தேதிகளில் போட்டிகள் நடக்கும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதியளித்துள்ளார். மேலும் வீரர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

  ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மும்பை, பெங்களூரு, ஹைதரபாத், கொல்கத்தா அணிகள் விளையாடுகின்றன. இதையடுத்து போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: