• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021: முதன் முதலாக ஐபிஎல்-ல் ஆடப்போகும் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர்

IPL 2021: முதன் முதலாக ஐபிஎல்-ல் ஆடப்போகும் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர்

ஐபிஎல் கோப்பை

ஐபிஎல் கோப்பை

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்ஸன் விலகியதையடுத்து ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இங்கிலாந்தின் நட்சத்திர வெள்ளைப்பந்து ஸ்பின் பவுலர்.

  • Share this:
    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்ஸன் விலகியதையடுத்து ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இங்கிலாந்தின் நட்சத்திர வெள்ளைப்பந்து ஸ்பின் பவுலர்.

    ஆம்! இங்கிலாந்து அணியின் பிரமாதமான வெள்ளைப்பந்து கிரிக்கெட் லெக்ஸ்பின் பவுலர் அடில் ரஷீத் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணியில் அடில் ரஷீத்


    ஐபிஎல் தொடரில் முதன் முதலாக ஆடவிருக்கிறார் அடில் ரஷீத். இந்நிலையில் செப்டம்பர் 8ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சேர்கிறார் அடில் ரஷீத். ஐபிஎல் 2021-ன் மீதமுள்ள ஆட்டங்கள் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது.

    Also Read: Bully-ன்னு எந்த இந்திய அணியைச் சொல்றீங்க? முந்தைய இந்திய அணிகளை கேலி பேசிய நாசர் ஹுசைன்: சுனில் கவாஸ்கர் காரசார பதிலடி

    பஞ்சாப் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 29ம் தேதி துபாய் வந்து இறங்குகின்றனர். பயிற்சியைத் தொடங்கும் முன்பாக 6 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.

    Also read: Joe Root| இந்திய பவுலர்களை திகைப்பில் ஆழ்த்திய ஜோ ரூட்: ஹாட்ரிக் சதம்; ஆண்டில் 6 சதங்கள்
     ஏலத்தில் அடிப்படை விலை 1.5 கோடி நிர்ணயித்த அடில் ரஷீத்தை யாரும் வாங்கவில்லை. இங்கிலாந்து அணியின் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் இவர் ரெகுலராக ஆடுபவர் நட்சத்திர வீரரும் ஆவார். 62 டி20 போட்டிகளில் 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 24.29 ஆகும். பாகிஸ்தானுக்கு எதிராக சமீபத்தில் 2 டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐசிசி டி20 ரேங்கிங்கில் ரஷீத் 4ம் இடத்தில் இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தப்ரைஸ் ஷம்சி ஐசிசி டி20 ரேங்கிங்கில் 3ம் இடத்தில் உள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஏற்கெனவே முருகன் அஸ்வின், ரவி பிஷ்னாய் ஆகிய லெக் ஸ்பின்னர்கள் உள்ளனர். ஜலஜ் சக்சேனா, சவ்ரவ் குமார் போன்ற ஸ்பின்னர்களும் உள்ளனர். அபுதாபி, துபாயில் கிரவுண்ட் பெரிதாக இருப்பதால் வேகப்பந்து வீச்சாளருக்குப் பதில் லெக் ஸ்பின்னர் ரஷீத்தை தேர்வு செய்தது நல்ல முடிவாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வங்கதேசத்துக்கு எதிராக டி20 ஹாட்ரிக் எடுத்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நேதன் எலிசையும் பஞ்சாப் கிங்ஸ் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: