சேப்பாக்கத்தை குறிவைத்து நடந்த வீரர்கள் தேர்வு... சிஎஸ்கே-வை துரத்தும் சோகம்

மகேந்திர சிங் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தேர்வு முழுக்க முழுக்க சேப்பாக்கம் மைதானத்திற்கு ஏற்றார் போல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுவிட்டது. சேப்பாக்கத்தை சொந்த மைதானமாக கொண்ட சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு லீக் ஆட்டங்களில் ஒரு போட்டி கூட சென்னையில் இல்லை என்பது ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணிக்கு ஏற்படும் சாதக, பாதகங்களை என்னவென்று பார்ப்போம்.

ஐ.பி.எல் தொடர்  இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக உள்ளது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் இந்தியாவில் பிரபலமாகியுள்ளது. இந்த கொரோனோ காலத்தில் நடப்பாண்டு ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுமா அல்லது கடந்த ஆண்டைப்போல் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே  நடத்தப்படுமா என்ற அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் விளையாடாது என்பது தான். இதனால் சி.எஸ்.கே ரசிகர்கள், தோனி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கொரோனோ பரவல் ஒரு சில நகரங்களில் அதிகமாக பரவி இருப்பதால் பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஐ.பி.எல் போட்டி நடத்த முடியாத சூழல் உறுவாகியுள்ளது. எனவே இந்த இரண்டு அணிகளும் சொந்த மைதானத்தில் விளையாட முடியாதநிலையை கருத்தில் கொண்டு அனைத்து அணிகளும் சொந்த மைதான அட்வாண்டேஜ் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்  விளையாடும் 14 லீக் ஆட்டங்களில் முதல் ஐந்து போட்டி மும்பை வான்கடே மைதானத்திலும் அடுத்த நான்கு போட்டி டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
10, 11, 12 வது லீக் ஆட்டங்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும்  கடைசி இரண்டு போட்டி கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் விளையாடவுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தேர்வு முழுக்க முழுக்க சேப்பாக்கம் மைதானத்திற்கு ஏற்றார் போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இம்ரான் தாஹிர், ஜடேஜா, சாய் கிஷோர், மிட்செல் சாண்ட்னர், மொயின் அலி, கௌதம் என ஆறு சுழற்பந்துவீச்சாளர்களை குவித்து வைத்துள்ளார் தோனி. எனவே இந்த ஆண்டு சி.எஸ்.கே விற்கு சென்னையில் போட்டி இல்லை என்பது சற்று கடினமாகவே  பார்க்கப்படுகிறது.  கடந்தாண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத நிலை ஏற்பட்டது. சேப்பாக்த்தில் சி.எஸ்.கே பல வெற்றிகளை குவித்ததாலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக முன்னேறி வந்தது. ஆனால் மீண்டும் அது கடினமாகி உள்ளதால் கேப்டன் தோனிக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும்.

சி.எஸ்.கே - விற்கு முதல் ஐந்து போட்டி மும்பையில் நடைபெறுகிறது. வான்கடே மைதானம் பௌன்சர் ஆகக்கூடிய மைதானம் என்பதால் வேகப்பந்துவீச்சை நம்பியே நாம் களமிறங்கவேண்டிய சூழல் உறுவாகியுள்ளது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஆதரவு இருப்பதால் சற்று கூடுதல் பலமாக பார்க்கப்படுவதாக கூறுகிறார் கிரிக்கெட் அனலிஷ்ட் விக்னேஷ்

சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே விளையாடுவதை பார்க்கமுடியாத சோகம் ஒருபுறம் இருந்தாலும், கடந்த ஆண்டு அடைந்த தோல்விக்கு  பதிலடி கொடுத்து அந்த சோகத்திற்கு மருந்து போட தோனி தலைமையிலான படை தயாராகிறதே என்பதே அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.
Published by:Vijay R
First published: