Home /News /sports /

IPL 2020 | ஏலத்திற்கு முன் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு விவரம்

IPL 2020 | ஏலத்திற்கு முன் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு விவரம்

ஐபிஎல் 2020

ஐபிஎல் 2020

IPL 2020 News |

ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான வீரர்களின் ஏலம் வரும் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் ஏலத்திற்கு முன் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1. சென்னை சூப்பர் கிங்ஸ்

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : சைதன்யா பிஷ்னோய், சாம் பில்லிங்ஸ், துருவ் ஷோரே, டேவிட் வில்லி மற்றும் மோஹித் சர்மா.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, ஃபஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மோனு குமார், என் ஜகதீசன், ஹர்பஜன் சிங், கர்ண் சார்மா, இம்ரான் தஹீர், தீபக் சஹர், கே.எம் ஆசிப்.

மீதமுள்ள தொகை : ரூ.14.60 கோடி

2.மும்பை இந்தியன்ஸ்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: யுவராஜ் சிங், எவின் லூயிஸ், ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், பாரிந்தர் ஸ்ரான், பென் கட்டிங், பங்கஜ் ஜெய்ஸ்வால், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரசிக் சலாம் மற்றும் அல்சாரி ஜோசப்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரோஹித் சர்மா, ஹார்டிக் பாண்ட்யா, பொல்லார்ட், குயின்டன் டி கோக், மிட்செல் மெக்லெனகன், ஜஸ்பிரீத் பும்ரா, லசித் மலிங்கா, குர்ணால் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், ட்ரெண்ட் போல்ட், ராகுல் சாஹர், இஷான் கிஷன், அனுகுல் ராய், தவால் குல்கர்னி, ஆதித்யா தாரே, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஜெயந்த் யாதவ்.

மீதமுள்ள தொகை : ரூ.13.05 கோடி

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : சிம்ரான் ஹெட்மேயர், டேல் ஸ்டெய்ன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கூல்டர்-நைல், கொலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுத்தி.

தக்கவைக்கப்பட் வீரர்கள் : விராட் கோலி, மொயீன் அலி, யுஸ்வேந்திர சாஹல், ஏபி டிவில்லியர்ஸ், பார்த்திவ் படேல், முகமது சிராஜ், பவன் நேகி, உமேஷ் யாதவ், குர்கீரத் மான், தேவதூத் பாடிக்கல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி.

மீதமுள்ள தொகை : ரூ.27.90 கோடி

4. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

விடுவிக்கப்பட்ட் வீரர்கள் : ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான், மார்ட்டின் குப்டில், தீபக் ஹூடா மற்றும் ரிக்கி பூய்

தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் : கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், ரஷீத் கான், முகமது நாபி, அபிஷேக் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, விருத்திமான் சஹா, ஸ்ரீவத் கோஸ்வாமி,புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ஷாபாஸ் நதீம், பில்லி ஸ்டான்லேக், பசில் தம்பி, டி நடராஜன்.

மீதமுள்ள தொகை : ரூ.17 கோடி

5. ராஜஸ்தான் ராயல்ஸ்

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : ஆஷ்டன் டர்னர், ஓஷேன் தாமஸ், சுபம் ரஞ்சனே, பிரசாந்த் சோப்ரா, இஷ் சோதி, ஆர்யமன் பிர்லா, ஜெய்தேவ் உனட்கட்,ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி, லியாம் லிவிங்ஸ்டன், சுதேசன் மிதுன்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஷாஷாங்க் சிங், ஸ்ரேயாஸ் கோபால்,மஹிபால் லோமர், வருண் ஆரோன், மனன் வோஹ்ரா, மாயங்க் மார்க்கண்டே, ராகுல் தெவதியா, அங்கித் ராஜ்பூத்

மீதமுள்ள தொகை : ரூ.17 கோடி

6. டெல்லி கேப்பிட்டள்ஸ்

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : கிறிஸ் மோரிஸ், கொலின் இங்க்ராம், ஹனுமா விஹாரி, அங்கூஷ் பெய்ன்ஸ், கொலின் மன்ரோ, பண்டாரு அய்யப்பா, மஞ்சோத் கல்ரா, ஜலாஜ் சக்சேனா, நாது சிங்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, ஷிகர் தவான், ரிஷாப் பந்த், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், சந்தீப் லாமிச்சேன்,ககிசோ ரபாடா, கீமோ பால், அக்ஷர் படேல், ஹர்ஷல் படேல், ஆர் அஸ்வின், அஜிங்க்யா ரஹானே.

மீதமுள்ள தொகை : ரூ.27.85 கோடி

7.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், அன்ரிச் நார்ட்ஜே, பியூஷ் சாவ்லா, ஜோ டென்லி, யர்ரா பிருத்விராஜ், நிகிக் நாயக், கே.சி. காரியப்பா, மத்யூவ் கெல்லி, ஸ்ரீகாந்த் முண்டே மற்றும் கார்லோஸ் பிராத்வைட்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், சுப்மான் கில், லாக்கி பெர்குசன், நிதீஷ் ராணா, சந்தீப் வாரியர்,ஹாரி கர்னி, கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, சித்தேஷ் லாட்.

மீதமுள்ள தொகை : ரூ.35.65 கோடி

8.கிங்ஸ் லெவன் பஞ்சாப்

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : டேவிட் மில்லர், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், சாம் குர்ரான், ஆண்ட்ரூ டை, வருண் சக்ரவர்த்தி, பிரப்சிம்ரன் சிங், அக்னிவேஷ் அயாச்சி.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், மாயங்க் அகர்வால், கருண் நாயர், சர்பராஸ் கான், நிக்கோலஸ் பூரன், மந்தீப் சிங், கே கவுதம், முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங், ஹார்டஸ் வில்ஜோன், எம் அஸ்வின், ஜே சுசித், ஹர்பிரீத் ப்ரார், தர்ஷன் நல்கண்டே.

மீதமுள்ள தொகை : ரூ.42.70 கோடி
Published by:Vijay R
First published:

Tags: IPL 2020

அடுத்த செய்தி