ஐ.பி.எல் டிக்கெட் விற்பனைக்கு தடை..! ரசிகர்கள் ஏமாற்றம்

கர்நாடகாவிலும் ஐ.பி.எல் போட்டி நடத்துவதற்கான சூழல் உள்ளதா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஐ.பி.எல் டிக்கெட் விற்பனைக்கு தடை..! ரசிகர்கள் ஏமாற்றம்
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் டிக்கெட் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு  தடை விதித்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் வரும் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பயின் மும்பை - சி.எஸ்.கே அணிகள் மோத உள்ளன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை - மும்பை அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் சிவசேனா தலைமையிலான அரசு டிக்கெட் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.


மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் டோப் இதுகுறித்து பேசுகையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஐ.பி.எல் போட்டிகளை தள்ளிவைக்க முடியுமா என்று ஆலோசனை நடத்தி வருவதாக கூறி உள்ளார். கர்நாடகாவிலும் ஐ.பி.எல் போட்டி நடத்துவதற்கான சூழல் உள்ளதா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று உறுதியாக கூறி வருகிறார். கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்