மகளிர் டி20 : சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தி டிரெய்ல்பிளேசர்ஸ் சாம்பியன்

சூப்பர்நோவாஸ் பந்துவீச்சில் ராதா யாதவ் 4 ஓவரில் 16 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். கடைசி 3 பந்தில் 3 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

மகளிர் டி20 : சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தி டிரெய்ல்பிளேசர்ஸ் சாம்பியன்
  • Share this:
மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர்நோவாஸ் அணியை 16 ரனகள் வித்தியாசத்தில் வீழ்த்திய டிரெய்ல்பிளேசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் முதலில் பந்துவீசியது. டிரெய்ல்பிளேசர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன் குவித்தது. டிரெய்ல்பிளேசர்ஸ் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அதிகபட்சமாக 49 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசி 68 ரன்கள் குவித்தார்.

சூப்பர்நோவாஸ் பந்துவீச்சில் ராதா யாதவ் 4 ஓவரில் 16 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். கடைசி 3 பந்தில் 3 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது.


இதையடுடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர்நோவாஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் கேப்டன் கவுர் அதிகபட்சமாக 30 ரன், சிறிவர்தனே 19 ரன் எடுத்தனர். பந்துவீச்சில் சல்மா கதுன் 3 விக்கெட் வீழ்த்தினார். 16 ரன் வித்தியாசத்தில் வென்ற டிரெய்ல்பிளேசர்ஸ் கோப்பையை வென்று அசத்தியது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: November 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading