ஐ.பி.எல் தொடர் ஒத்திவைப்பு..!

ஐ.பி.எல் தொடர்  ஒத்திவைப்பு..!
ஐ.பி.எல்
  • Share this:
கொரேனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் 13-வது சீசன் வரும் 29ம் தேதி மும்பை வான்கடே மைானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், சென்னை அணியும் மோத இருந்தது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால் சர்வதேச விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தியாவிலும் கொரோனா பரவி வருவதால் தொடரை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதனிடையே மகாராஷ்டிராவில் ஐபில் தொடக்க போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. டெல்லியிலும் போட்டிகள் நடைபெற அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.


மேலும் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு வீரர்கள் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. அத்துடன் ஐ.பி.எல் தொடரை ஆளில்லா மைதானத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டது.

ஆனால் இதுப்போன்ற சூழலில் ஐ.பி.எல் தொடர் நடைபெற்றால் அதுப்போட்டியின் சுவாரஸ்யத்தை குறைத்துவிடும் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் கலந்து ஆலேசாசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரை ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கினால் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதிலும் எந்த சிக்கல் இருக்காது என்பது குறிப்பிடதக்கது.

First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading