விளையாட்டு

  • associate partner

ஐபிஎல் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து... முதல் போட்டியிலேயே சென்னை - மும்பை மோதல்...!

ஐபிஎல் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து... முதல் போட்டியிலேயே சென்னை - மும்பை மோதல்...!
  • News18
  • Last Updated: February 18, 2020, 11:33 AM IST
  • Share this:
ஐபிஎல் 2020க்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், மார்ச் 29-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தாண்டுக்கான ஐபிஎல் டி20 போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் போட்டியில் மோதுகின்றன.

இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் மார்ச் 29ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.


இதில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய நிலையில், அந்த இரு அணிகளும் தற்போது முதல் போட்டியில் களமிறங்க உள்ளன.

அதன் பிறகு, ஏப்ரல் 2-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் உடன் விளையாடும் சென்னை அணி, ஏப்ரல் 13ல் டெல்லியுடன் மோதவுள்ளது.

சன்ரைசர்ஸ் அணியுடன் ஏப்ரல் 19ஆம் தேதியும், ஏப்ரல் 24ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் விளையாடுகிறது சென்னை அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடன் ஏப்ரல் 27ஆம் தேதி மோதும் சென்னை அணி, ஏப்ரல் 30ல் மீண்டும் ஐதரபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. அதன்பிறகு மே 4ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடனும், மே 7ஆம் தேதி கொல்கத்தா அணியுடனும் மோதும் சென்னை அணி, மே 10ஆம் தேதி டெல்லி அணியுடன் விளையாடிய பின்னர், மே 14ஆம் தேதி பெங்களூரு அணியுடன் மீண்டும் மோதவுள்ளது. இறுதிப் போட்டி மே 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.Also see:
First published: February 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading