• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐ.பி.எல் பரிசுத்தொகை பாதியாக குறைப்பு... பிசிசிஐ அதிரடி

ஐ.பி.எல் பரிசுத்தொகை பாதியாக குறைப்பு... பிசிசிஐ அதிரடி

ஐபிஎல் கோப்பை

ஐபிஎல் கோப்பை

IPL 2020 | கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது.

  • Share this:
    ஐ.பி.எல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை பாதியாக குறைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல் தொடர் வரும் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பயின் மும்பை அணியும் - சி.எஸ்.கே அணியும் மோத உள்ளன. இந்த தொடரின் இறுதிப் போட்டி மே மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது.

    கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடியும், 2-வது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது. 3-வது மற்றும் 4-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பரிசுத்தொகையை பிசிசிஐ பாதியாக குறைத்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2-வது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.6.25 கோடியும் வழங்கப்பட உள்ளது. மேலும் 3வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிக்கு ரூ.4.375 கோடி வழங்கப்படும்.

    ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு மாநில சங்கங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: