ஐ.பி.எல் நடைபெறுமா? இன்று இறுதி முடிவை அறிவிக்கும் பிசிசிஐ

பிசிசிஐ  அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஐ.பி.எல் குறித்த முடிவு இன்று அறிவிக்கப்படும் - கங்குலி

ஐ.பி.எல் நடைபெறுமா? இன்று இறுதி முடிவை அறிவிக்கும் பிசிசிஐ
ஐ.பி.எல்
  • Share this:
நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா என்ற முடிவை பிசிசிஐ இன்று அறிவிக்கும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் இந்தாண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பான முடிவு இன்று வெளியாகும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அவர் அளித்த பேட்டியில், பிசிசிஐ  அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஐ.பி.எல் குறித்த முடிவு இன்று அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து பேசுகையில், இது பயங்கரமானது. எனது 46 வருட வாழ்க்கையில், இதுபோன்ற எதையும் நான் அனுபவித்ததில்லை. அது மட்டுமல்ல, உலகம் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை. இந்த நிலைமையை யாரும் மீண்டும் பார்க்க மாட்டோம் என்று நம்புகிறேன். அடுத்த இரண்டு வாரங்களில் எத்தனை பேர் இறக்கக்கூடும் என்று முழு உலகமும் சிந்திக்கிறது! இது நம்பமுடியாதது உள்ளது என்றார்.

First published: April 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading