கொல்கத்தாவில் முதன்முறையாக நடைபெற உள்ள ஐ.பி.எல் வீரர்கள் ஏலம்!

கொல்கத்தாவில் முதன்முறையாக நடைபெற உள்ள ஐ.பி.எல் வீரர்கள் ஏலம்!
  • Share this:
ஐ.பி.எல் 2020 தொடருக்கான வீரர்கள் ஏலம் முதன்முறையாக கொல்கத்தாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் 13வது ஐ.பி.எல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் வழக்கமாக பெங்களூருவில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதன்முறையாக கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் வீரர்களை தேர்வு செய்ய 2019ம் ஆண்டு 82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.  2020ம் ஆண்டு நடைபெற உள்ள தொடருக்கு 85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதன்படி டெல்லி அணிஅதிகப்படியான தொகை மீதம் வைத்துள்ளது. அந்த அணி 8.2 கோடி ரூபாய் வைத்துள்ளது. ராஜஸ்தான் அணியிடம் ரூ.7.15 கோடி, கொல்கத்தா அணியிடம் ரூ.6.05 கோடி, சன்ரைசர்ஸ் அணியிடம் ரூ.5.3 கோடி, பஞ்சாப் அணியிடம் ரூ.3.2 கோடி, மும்பை அணியிடம் ரூ.3.05 கோடி, பெங்களூரு அணியிடம் ரூ.1.8 கோடி மீதம் வைத்துள்ளது.

Also Watch : 5 தங்கம் வென்ற என்னை அரசு கண்டுகொள்ளவில்லை: பளுதூக்கும் வீராங்கனை

First published: October 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...