யூசுஃப் பதான் வைத்த கிராண்ட் டின்னர்... தடபுடல் விருந்தால் அசந்துபோன ஹைதராபாத் வீரர்கள்...!

#YusufPathan hosts #SRH teammates for #granddinner on #weddinganniversary | யூசுஃப் பதான் - அஃப்ரீன் கான் ஆகிய இருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணமானது.

news18
Updated: March 29, 2019, 3:35 PM IST
யூசுஃப் பதான் வைத்த கிராண்ட் டின்னர்... தடபுடல் விருந்தால் அசந்துபோன ஹைதராபாத் வீரர்கள்...!
யூசுஃப் பதானின் திருமண நாள் விருந்து.
news18
Updated: March 29, 2019, 3:35 PM IST
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் யூசுஃப் பதான் தனது திருமண நாளை முன்னிட்டு, அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு தடபுடலாக விருந்து வைத்து அசத்தினார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சகோதரர்கள் இர்ஃபான் பதான் - யூசுஃப் பதான் ஆகியோர் வெற்றி வீரர்களாக இருந்தனர். தற்போது, இர்ஃபான் பதான் வர்ணனையாளராக இருக்கிறார்.

யூசுஃப் பதான், நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

யூசுஃப் பதான் - அஃப்ரீன் கான் ஆகிய இருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணமானது. இவர்கள் தங்களது 6-வது திருமண நாளை நேற்று முன்தினம் (மார்ச் 27) சிறப்பாக கொண்டாடினர்.

இதனையொட்டி ‘என் காதலுக்கு வாழ்த்துகள்’ என யூசுஃப் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் திருமண நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.இதனை அடுத்து, திருமண நாளை முன்னிட்டு அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு யூசுஃப் பதான், தடபுடலாக மிகப்பெரிய ‘கேண்டில் நைட்’ விருந்து வைத்து அசர வைத்துள்ளார்.
Loading...
விருந்தில் கலந்துகொண்ட வீரர்கள், உணவினை வெளுத்து வாங்கும் அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

விருந்து வைத்த புகைப்படத்தைப் பதிவிட்ட திருமண நாளுக்கு சகவீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்றுடன் முடிகிறது தடைக்காலம்... உலகக்கோப்பையில் ஸ்மித், வார்னருக்கு இடம் கிடைக்குமா?

#CSKvRR | பாக்ஸிங்கிலும் பட்டைய கிளப்பும் ‘சின்ன தல’ ரெய்னா!

வெற்றியைப் பறித்த நோ-பால்... நடுவர்களை சாடிய காயம் பட்ட சிங்கம்...!

Also Watch...First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...