முகப்பு /செய்தி /விளையாட்டு / #CSKvMI | இறுதிப் போட்டிக்குச் செல்வது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை!

#CSKvMI | இறுதிப் போட்டிக்குச் செல்வது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை!

ரோகித் சர்மா - மகேந்திர சிங் தோனி

ரோகித் சர்மா - மகேந்திர சிங் தோனி

#IPL2019: Who will Enter Final, #MI vs CSK Match Today? | சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது. #MIvCSK

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது.

12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

Chennai Super Kings, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)it

ப்ளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி மே 12-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வியடையும் அணிக்கு 2-வது தகுதிச்சுற்றின் மூலம் (குவாலிஃபையர் 2) மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.

Mumbai Indians, மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி. (BCCI)

ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்த முறை இரு அணிகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அதிகமுறை கோப்பையைக் கைப்பற்றி புதிய சாதனை படைக்கும்.

இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!

நாங்களும் விளையாடுவோம்... பெண்கள் டி 20 தொடரில் 90 ரன்கள் விளாசிய மந்தனா

VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?

ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்

Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Chennai Super Kings, Cricket, CSK, IPL 2019, MS Dhoni, Rohit sharma