VIDEO | நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? தோனியை தாக்கிய மோசமான பவுன்சர்!

#IPL2019: When #Thala #Dhoni got struck on the head video goes viral | 19-வது ஓவரில் தோனி சுவாசிக்கவே சிரமப்பட்டார். #RRvCSK

news18
Updated: April 12, 2019, 1:54 PM IST
VIDEO | நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? தோனியை தாக்கிய மோசமான பவுன்சர்!
மைதானத்தில் சுவாசிக்க சிரமப்பட்ட தோனி. (BCCI)
news18
Updated: April 12, 2019, 1:54 PM IST
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியின் ஹெல்மெட்டை மோசமான பவுன்சர் பலமாக தாக்கியது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.

அடுத்துக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, தோனி 58 ரன்களும், ராயுடு 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் வெற்றிக்கு போராடி தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

MS Dhoni batting, CSK
அரைசதம் அடித்த தோனி. (BCCI)


இந்தப் போட்டியின் 17-வது ஓவரில் ராஜஸ்தான் அணியின் ஆர்செர் வீசிய மோசமான பவுன்சர் பந்து தோனியின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இருப்பினும், அதை பொருட்படுத்தாமல் தோனி ரன் எடுக்க ஓடினார்.



அதேபோல், 19-வது ஓவரில் தோனி சுவாசிக்க சிரமப்பட்டார். உடனே சென்னை அணியின் உடற்பயிற்சி நிபுணர் மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டார். தோனி, மைதானத்தை விட்டு வெளியேறிவிடுவார் என சிலர் நினைக்க, சிறிது நேர சிகிச்சைக்குப்பிறகு, மீண்டும் பேட்டிங் செய்து ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தார்.
Loading...
MS Dhoni Stuck Bouncer, CSK
தோனியைத் தாக்கிய பவுன்சர் பந்து. (BCCI)


சுவாசிக்க முடியாமல் மண்டியிட்ட தோனியின் புகைப்படத்தை சி.எஸ்.கே தனது ட்விட்டரில், “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.

ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...!

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

தோனி, அம்பதி ராயுடு அதிரடி! கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி..



 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...