3 நாள்ல சந்திப்போம்னு கொல்கத்தா ட்வீட்... வச்சு செய்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

#IPL2019: We Will Meet After 3 Days, #KKR Warned To #CSK | ரசெலின் ருத்ரதாண்டவத்தால், பெங்களூருவை வீழ்த்தியது கொல்கத்தா.

3 நாள்ல சந்திப்போம்னு கொல்கத்தா ட்வீட்... வச்சு செய்த சி.எஸ்.கே ரசிகர்கள்!
ரசெலுக்கு ஆலோசனை தரும் தோனி. (Twitter)
  • News18
  • Last Updated: April 6, 2019, 3:30 PM IST
  • Share this:
பெங்களூருவை பந்தாடியதை அடுத்து, 3 நாள்ல சந்திப்போம்னு ட்வீட் போட்ட கொல்கத்தா அணியை, சென்னை ரசிகர்கள் ட்விட்டரில் வச்சு செய்தனர்.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

அடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. விக்கெட் சில விழுந்ததும் ரன் வேகம் குறைந்த நிலையில், ரசெலின் ருத்ரதாண்டவத்தால், கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

போட்டி முடிந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எச்சரிக்கும் விதமாக “3 நாள்ல சந்திப்போம்னு” கொல்கத்தா அணி ட்வீட் செய்திருந்தது. இதற்கு சென்னை அணி சார்பில் கண்டிப்பாக என்று பதிலளிக்கப்பட்டது.இந்த ட்விட்டரை பதிவுக்கு சென்னை ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இரு அணி ரசிகர்களும் மாறி மாறி கமெண்ட் போட்டு வருகின்றனர்.பிராவோ இல்லாமல் சென்னை அணிக்கான 11 வீரர்கள் யார் யார்?

ஐ.பி.எல் பரிதாபங்கள்... பவுலர்கள் இல்லாமல் தவிக்கும் சி.எஸ்.கே!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்