ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கிறிஸ் கெய்ல் 64 பந்துகளில் 99 ரன்கள் குவித்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின், தொடக்க வீரர் பார்த்தீவ் படேல் (19) விரைவில் வெளியேறினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ், கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்து நேர்த்தியாக விளையாடினார். கோலி (67) அரைசதம் கடந்து அவுட்டானார். டி வில்லியர்ஸ் 38 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கோலி. (BCCI)
இறுதியில், 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு, நடப்பு சீசனில் இதுவே முதல் வெற்றியாகும்.
இந்தப் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ரோகித் சர்மா, ரகானே ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்
அப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்
VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!
கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.