Home /News /sports /

ஆர்.சி.பி. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கோலி, டி வில்லியர்ஸ்!

ஆர்.சி.பி. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கோலி, டி வில்லியர்ஸ்!

விராட் கோலி - ஏபி டி வில்லியர்ஸ்.

விராட் கோலி - ஏபி டி வில்லியர்ஸ்.

#IPL2019: #ViratKohli, #ABdeVilliers Said Sorry to #RCB's Fans | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாத நிலையில், இன்று தனது கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

  • News18
  • Last Updated :
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோர் இருவரும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டனர்.

    நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். பட்டியலில் மூன்று இடத்தில் இருக்கும், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

    RCB Team, BCCI
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. (BCCI)


    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, நடப்பு தொடர் மோசமானதாக அமைந்துவிட்டது. இதுவரை, அந்த அணி 13 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது. ஏற்கனவே, ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து பெங்களூரு அணி வெளியே சென்றுவிட்டது.

    இந்நிலையில், அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோர் இருவரும் கூட்டாக பேசும் வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் பேசிய டி வில்லியர்ஸ், “ஆர்.சி.பி ரசிகர்களுக்கு...நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. இந்த சீசனில் எங்களது ஆட்டம் திருப்திகரமாக இல்லை. அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார்

    தொடர்ந்து பேசிய கோலி, “ நிச்சயம் இந்த சீசன் எங்களுக்கும், உங்களுக்கும் ஏமாற்றமான ஒன்றுதான். 3 மணி நேரத்துக்கும் மேலாக மைதானத்தில் இருந்து ஆதரவு அளிக்கும் நீங்கள்தான் சிறந்த ரசிகர்கள்” என்றார்.



    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாத நிலையில், இன்று தனது கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

    அப்ரிடி ஒரு கோமாளி.. மனநலம் பாதிக்கப்பட்டவர்... கம்பீர் பதிலடி!

    உலகக்கோப்பையை விட ஐ.பி.எல் போட்டிதான் சிறந்தது.. வெளிநாட்டு வீரர் புகழாரம்!




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: AB de Villiers, Captain Virat Kohli, Cricket, Fans, IPL 2019, RCB

    அடுத்த செய்தி