சென்னையில் ஐபிஎல்: நாளை முதல் டிக்கெட் விற்பனை!

ஐ.பி.எல் டிக்கெட் உடன் சென்னை ரசிகர். (Twitter)

#IPL2019: Opening match #CSKvRCB at Chennai tickets sale announced | இணையதளம் மூலம் அன்று முதல் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் தொடக்கப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது.

  2019-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 23-ம் தேதி (மார்ச் 23) தொடங்க உள்ளது. முதற்கட்டமாக முதலிரண்டு வாரங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

  ஐபிஎல் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  CSK Training, Suresh Raina, சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே
  வலைப்பயிற்சியில் சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னா. (CSK)


  கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி சில நாட்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

  IPL Cup, ஐ.பி.எல்
  ஐ.பி.எல் கோப்பை .


  அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் தொடக்க போட்டிக்கான டிக்கெட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை முதல் (மார்ச் 16) விற்பனை செய்யப்பட உள்ளது.  அதேபோல், இணையதளம் மூலம் அன்று முதல் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து சென்னை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  VIDEO: நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு.. உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்.. தொடர் ரத்து!

  #IPL2019: தோனியா? கோலியா? 23-ம் தேதி தெரிந்துவிடும்!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: