சென்னையில் 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது?

#IPL2019: Ticket Sales Date Announced For #CSK's second home coming match | சேப்பாக்கத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் சென்னை அணி, ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

Web Desk | news18
Updated: March 22, 2019, 9:16 PM IST
சென்னையில் 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது?
ஐபிஎல் டிக்கெட் உடன் சென்னை ரசிகர். (Twitter)
Web Desk | news18
Updated: March 22, 2019, 9:16 PM IST
சென்னையில் நடைபெறும் 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல்) நாளை (மார்ச் 23) சென்னையில் தொடங்க உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

IPL opening ceremony,
ஐ.பி.எல் தொடக்க விழா. (IPL)


தொடக்க போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. விடிய விடிய வரிசையில் காத்திருந்து முதல் போட்டிக்கான டிக்கெட்டை ரசிகர்கள் வாங்கிச் சென்றனர்.

டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் விற்றுத்தீர்ந்தன. அதே நாளில் இணையதளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதியும் தரப்பட்டிருந்தது.

Chepauk stadium, சேப்பாக்கம் மைதானம்
டிக்கெட் வாங்க காத்திருந்த ரசிகர்களின் கூட்டம்


இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மண்ணில் நடைபெறும் 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 31-ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
Loading...
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 26-ம் தேதி காலை 8.45 மணிக்கு தொடங்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இணையதளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSK Tickets 2nd Match
சென்னையில் நடைபெறும் 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


முதல் போட்டிக்கான டிக்கெட்டை தவிரவிட்ட ரசிகர்கள் 2-வது போட்டிக்கான டிக்கெட்டை வாங்க இன்று முதல் 4 நாட்கள் அவகாசம் இருக்கிறது. அதனால், இப்போதிருந்தே சென்னை அணி ரசிகர்கள் டிக்கெட்டை எப்படி வாங்கலாம் என திட்டமிடத் தொடங்கிவிட்டனர்.

தமிழில் வெளியானது ‘Roar Of The Lion’.. சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

VIDEO: ரசிகர்களைப் பார்ப்பதற்காக தடுப்பையே தாண்டிய தல தோனி!

#CSKvRCB: கடந்த கால வரலாறு.. தோனியின் மஞ்சள் படையை சமாளிக்குமா கோலியின் படை?

ஆர்.சி.பி உடன் நாளை பலப்பரீட்சை... இறுதிக்கட்ட பயிற்சியில் சி.எஸ்.கே வீரர்கள்...!

#IPL2019: சி.எஸ்.கே.வுக்கு யோயோ டெஸ்ட் தேவையில்லை... பயிற்சியாளர் பிளெமிங் அதிரடி பேட்டி!

Also Watch...

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...