ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...!

#IPL2019: Terrorists Plan To Attack #Mumbai #WankhedeStadium #HighAlert | கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் மைதானங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: April 12, 2019, 12:43 PM IST
ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...!
மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு. (Twitter)
news18
Updated: April 12, 2019, 12:43 PM IST
ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் அளித்துள்ள தகவலை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி வரை (மார்ச் 23 - மே 12) இந்தியாவில் நடைபெறுகிறது. இதில், ஏராளமான வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக சில உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன. குறிப்பாக, மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Mumbai Indians Practice
வான்கடே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். (MI)


இதனால், கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் மைதானங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வீரர்கள் பேருந்தின் மூலம் மைதானத்துக்கு அழைத்து வரும்போது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால், அதற்கு கொடுக்கப்படும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன.

Loading...

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

தோனி, அம்பதி ராயுடு அதிரடி! கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி.. 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...