ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

VIDEO | கல்லி கிரிக்கெட்டிலும் விஜய் சங்கர் கில்லிதான்!

VIDEO | கல்லி கிரிக்கெட்டிலும் விஜய் சங்கர் கில்லிதான்!

ஆல்ரவுண்ட் விஜய் சங்கர். (BCCI)

ஆல்ரவுண்ட் விஜய் சங்கர். (BCCI)

#IPL2019: #SunrisersHyderabad stars #RashidKhan and #VijayShankar Played #Gullycricket | உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பிடித்துள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள விஜய் சங்கர், ‘கல்லி கிரிக்கெட்’ போட்டியிலும் தான் கில்லி என நிரூபித்துள்ளார்.

  ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் விளையாடி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

  Indian Team Squad WC
  உலகக்கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)

  அதில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கரும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது தேர்வு குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.கே.பிரசாத் கூறுகையில், “விஜய் சங்கர், பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என 3 பரிமாணங்களில் அசத்துகிறார். அதனால் அவருக்கு வாய்ப்பு அளித்தோம்” என்று தெரிவித்தார்.

  இந்நிலையில், தெருவோரங்களில் விளையாடும் ‘கல்லி கிரிக்கெட்’ போட்டியிலும் தான் கில்லி என நிரூபித்துள்ளார். ஹைதராபாத்தில் விஜய் சங்கர் மற்றும் சக வீரர் ரஷித் கான் ஆகியோர் இருவரும் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினர். ரஷிக் கான் வீசிய அனைத்து பந்துகளையும் விஜய் சங்கர் சிக்ஸருக்கு பறக்கவிடுகிறார்.

  பின்னர், சிறுவர்களுடன் இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ ஐ.பி.எல் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

  #SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்!

  3D கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழுவை கிண்டல் செய்த அம்பதி ராயுடு!


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Murugesan L
  First published:

  Tags: IPL 2019