இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக ஐ.பி.எல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இலங்கையின் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழந்த இடம். (AFP)
குண்டுவெடிப்பில் 10 இந்தியர்கள் உள்பட 310-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக ஐ.பி.எல் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமான பாதுகாப்பைவிட சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் பலத்த பாதுகாப்பு.
5 துணை ஆணையர், 14 உதவி ஆணையர் தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அதிவிரைவு படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியில் 2 முக்கிய மாற்றம்? தோனியின் அதிரடி திட்டம்!
தோனியைப் போல் வேறு யாரும் செய்ததில்லை: உலகக்கோப்பையை வென்ற கேப்டன் புகழாரம்!
மைதானமே இல்லாத ஊரில் இருந்து வரலாறு படைத்த கோமதி: கண்கலங்க வைக்கும் பின்னணி!
Also Watch...
அஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் - கலாய்த்த ஸ்டெயின்
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.