வார்னர் அதிரடி... நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பெற்றது ஹைதராபாத்!

#IPL2019, #SRHvsRR Highlights: #SunrisersHyderabad win by 5 wickets | ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது.

news18
Updated: March 30, 2019, 12:37 PM IST
வார்னர் அதிரடி... நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பெற்றது ஹைதராபாத்!
பெயர்ஸ்டோவ் மற்றும் வார்னர். (IPL)
news18
Updated: March 30, 2019, 12:37 PM IST
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த 8-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கின.

Sunrisers Hyderabad, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. (IPL)


டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் 5 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், ரகானே ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். ரகானே 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மறுபுறம், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்த சாம்சன், ஐ.பி.எல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 55 பந்துகளில் 102 ரன்களைக் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பெயர்ஸ்டோவ் ஆகிய இருவரும் எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். வார்னர் 37 பந்துகளில் 69 ரன்கள் விளாசியும், பெயர்ஸ்டோவ் 28 பந்துகளில் 45 ரன்கள் விளாசியும் பெவிலியன் திரும்பினர். கேப்டன் கேன் வில்லியம்சன் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த விஜய் சங்கர் 15 பந்துகளில் 35 ரன்கள் விளாசி நடையைக் கட்டினார்.கடைசியில் ரஷித் கான் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். ஹைதராபாத் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யூசுஃப் பதான் 16 ரன்களுடனும், ரஷித் கான் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

7 பந்துகளில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்தெறிந்த மும்பை வீரர்!

#IPL2019: இதுவரை சிஎஸ்கே வீரர்கள் ஐபிஎல் தொடரில் செய்தது என்ன?

தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!

VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!

Also Watch...First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...