#SRHvRCB | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படுதோல்வி!

#IPL2019, #SRHvsRCB in Hyderabad: SRH Beat RCB by 118 Runs | 114 ரன்கள் விளாசிய பேர்ஸ்டோவ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

news18
Updated: April 1, 2019, 3:31 PM IST
#SRHvRCB | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படுதோல்வி!
ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி. (IPL)
news18
Updated: April 1, 2019, 3:31 PM IST
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 11-வது லீக் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி படுதோல்வி அடைந்தது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 11-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத்தின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர், எதிரணியின் பந்துவீச்சைத் சிதறடித்தனர். ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதுவே நடப்பு சீசனில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிக ரன்களாகும்.
Loading...


பேர்ஸ்டோவ் 56 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வார்னர் 55 பந்துகளில் 100 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. ஆனால், ஹைதராபாத் அணியின் துல்லியமான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பெங்களூரு வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், 19.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 118 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் முகமது நபி 4 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 114 ரன்கள் விளாசிய பேர்ஸ்டோவ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.



பெங்களூரு அணியின் மோசமான 2-வது தோல்வி இதுவாகும். இதற்குமுன்பு, 2008-ல் கொல்கத்தா அணிக்கு எதிராக 140 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வி அடைந்திருந்தது.

ஒரே போட்டியில் இவ்வளவு சாதனைகளா? பேர்ஸ்டோவ், வார்னர் ஜோடி அபாரம்!


#CSKvRR | சென்னை அணிக்காக புதிய சாதனையை நோக்கி பிராவோ!

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து... பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன் கைது!

‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

#CSKvRR | சேப்பாக்கத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சி.எஸ்.கே அணியில் என்ன மாற்றம்?

சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

#IPL2019 | ‘யூனிவெர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் புதிய வரலாற்று சாதனை!

Also Watch...



POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:





விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...