ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்!

#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)

#IPL2019: #SRHvsCSK PREVIEW, Protagonists, Head to Head | நடப்பு சீசனில் ஹைதராபாத் அணியுடன் முதல் முறையாக மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

  தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி அணி, இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் குவித்து பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை சி.எஸ்.கே உறுதி செய்யும்.

  ஹைதராபாத அணியை பொறுத்தவரை, ஆரம்ப கட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. பின்னர் அடுத்தடுத்த ஹாட்ரிக் தோல்விகளால் பட்டியலில் சரிவை சந்தித்து, தற்போது 6-வது இடத்தில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகால ஐ.பி.எல் சீசன்களில், சொந்தமண்ணில் முதல் முறையாக அடுத்ததடுத்து இரண்டு தோல்வியை அந்த அணி சந்தித்துள்ளது.

  IPL, SRH, சன் ரைசர்ஸ் ஐதராபாத்
  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி (SRH)

  இரு அணிகளின் பலம் vs பலவீனம்:

  ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், பேர்ஸ்டோவ் சில போட்டிகளை வென்றுகொடுத்தனர். ஆனால், மிடில் ஆர்டலில் பிரச்னை இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லிம்சன் காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது அணிக்கு பலவீனம்.

  மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் அல்லது மனிஷ் பாண்டே போட்டியை வெற்றியுடன் முடித்து வைக்கும் இடத்தில் உள்ளனர். ஷகிப் அல் ஹசனை மிடில் ஆர்டருக்காக சேர்ப்பது அணிக்கு பலம் சேர்க்கும்.

  சென்னை அணியின் வெற்றி ஒரு வீரரை மட்டும் சார்ந்திருப்பதாக தெரியவில்லை. 5 வெவ்வேறு வீரர்கள் வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர். அந்த அணி அனைத்திலும் ஓரளவுக்கு பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது.

  CSK Team,
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.(CSK)

  முன்னணி வீரர்களான லுங்கி இங்கிடி தொடரில் இருந்து விலகியது, பிராவோ காயத்தால் விளையாடமால் இருப்பது அணிக்கு பலவீனமாக உள்ளது.

  வெற்றி vs தோல்வி விகிதம்:

  இதுவரை, இரு அணிகளும் 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 8-ல் சி.எஸ்.கேவும், 2-ல் மட்டும் ஹைதராபாத்தும் வெற்றுள்ளது. கடந்த 2018 சீசனில் 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் சி.எஸ்.கே வெற்றி பெற்றது.

  பவர் ப்ளேயில் ஹைதராபாத் அணி நல்ல ரன்களைச் சேர்த்துள்ளது. ஆனால், சி.எஸ்.கே குறைவான ரன்களையே சேர்த்துள்ளது.

  3D கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழுவை கிண்டல் செய்த அம்பதி ராயுடு!


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Murugesan L
  First published:

  Tags: Chennai Super Kings, CSK, IPL 2019, MS Dhoni