சி.எஸ்.கேவை துரத்தும் ‘நோ-பால்’ சர்ச்சை... அம்பயரின் முடிவால் ரசிகர்கள் கோபம்!

#IPL2019, #SRHvCSK: #RavindraJadeja Asks #Umpire For #NoBall in #FinalOver | முன்னதாக, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நோ-பால் சர்ச்சை எழுந்தபோது கேப்டன் தோனி, அம்பயருடன் வாக்குவாதம் செய்ததார்.

சி.எஸ்.கேவை துரத்தும் ‘நோ-பால்’ சர்ச்சை... அம்பயரின் முடிவால் ரசிகர்கள் கோபம்!
அம்பயரிடம் வாக்கு வாதம் செய்த ஜடேஜா - ராயுடு.
  • News18
  • Last Updated: April 18, 2019, 3:55 PM IST
  • Share this:
ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் அம்பயரின் ‘நோ-பால்’ சர்ச்சையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் கூல் கேப்டன் தோனி திடீரென இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

தோனி பங்கேற்காத நிலையில், சுரேஷ் ரெய்னா கேப்டனாக அணியை வழிநடத்தினார். இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


CSK Team, IPL, BCCI
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)


சி.எஸ்.கே அணியின் பேட்டிங்கின்போது, புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் நான்காவது பந்தை ரவீந்திர ஜடேஜா எதிர்கொண்டார். அந்த பந்தை புவனேஸ்வர் குமார் பவுன்சராக வீசினார். அடுத்த பந்தையும் அவர் பவுண்சராக வீசிய போதும் அம்பயர் நோ-பால் கொடுக்கவில்லை.

ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டுமே வீச முடியும், ஆனால், இரண்டு பவுன்சர் என ஜடேஜாவும், ராயுடுவும் அம்பயரிடம் வாக்கு வாதம் செய்தனர். அம்பயர்கள் தங்களின் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால், மைதானத்தில்களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


முன்னதாக, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நோ-பால் சர்ச்சை எழுந்தபோது கேப்டன் தோனி, அம்பயருடன் வாக்குவாதம் செய்ததால், அவருக்கு 50 சதவீத ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

தல தோனி எப்போது அணிக்கு திரும்புவார்? ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

காலையிலேயே ஓட்டுப்போட்ட கிரிக்கெட் பிரபலம்... ரசிகர்களுக்கு முன்னுதாரணம்!

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

ஜானி பேர்ஸ்டோ, வார்னர் அதிரடி! சென்னையை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் அணி

ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?

ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading