எளிமையின் சிகரமான தல தோனி - சாக்‌ஷி... வைரலாகும் புகைப்படம்...!

#IPL2019: #SimplicityOfDhoni - #Sakshi Photo Goes Viral | சென்னை அணி அடுத்ததாக, ஜெய்ப்பூரில் நாளை (ஏப்ரல் 11) நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதுகிறது.

எளிமையின் சிகரமான தல தோனி - சாக்‌ஷி... வைரலாகும் புகைப்படம்...!
ரசிகர்களுடன் தோனி. (Twitter)
  • News18
  • Last Updated: April 10, 2019, 4:07 PM IST
  • Share this:
எளிமையின் சிகரம் என்று சொல்லும் அளவுக்கு தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் செயலை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, சென்னை அணியின் அபார பந்துவீச்சால், 20 ஓவர்கள் முடிவில் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 17.2 ஓவரிகளில் வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.


CSK vs KKR, IPL
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஜாதவ் - டூ பிளெசிஸ். (BCCI)


சென்னை அணி அடுத்ததாக, ஜெய்ப்பூரில் நாளை (ஏப்ரல் 11) நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதுகிறது. இதற்காக சென்னை அணி வீரர்கள் விமானம் மூலம் ஜெய்ப்பூர் சென்றனர்.

சென்னை விமானநிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்தபோது, தளத்தில் எதுவும் விரிக்காமல் தலைக்கு தனது பேக்கை வைத்து அப்படியே தூங்கினார் தல தோனி. பேக்கின் மறுபக்கம் அவரது மனைவி சாக்‌ஷி தனது தலையை வைத்து ஓய்வு எடுத்தார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது.

கொல்கத்தாவுக்கு ஊமக்குத்து... ஹர்பஜன் போட்ட கலாய் ட்வீட்!

ஹிட்மேனுக்கு காயம்... ஐ.பி.எல் போட்டியால் உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோகும் அபாயம்!

ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை... பதக்கங்கள் பறிப்பு!

VIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா? தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்