பெங்களூரு அணியின் தோல்வி குறித்து விமர்சித்த ஐ.பி.எல் போட்டி வர்ணனையாளர் சைமன் டவுலுக்கு ரசிகர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் களைகட்டி வருகின்றன. இதில், விளையாடும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
அந்த புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் பரிதவிக்கிறது. பெங்களூரு அணி முதல் வெற்றியைப் பெறுமா என அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிபார்ப்புடன் இருக்கின்றனர்.

ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி. (IPL)
இந்நிலையில், அணியின் செயல்பாட்டை விமர்சித்த வர்ணனையாளருக்கு ரசிகர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய ஐ.பி.எல் போட்டி வர்ணனையாளர் சைமன் டவுல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தோல்வியை விமர்சனம் செய்துள்ளார்.
பெங்களூரு அணி குறித்து விமர்சனம் செய்தால் கொலை செய்துவிடுவோம் என அந்த அணியின் ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளதை ஃபேஸ்புக்கில் சைமன் டவுல் பதிவிட்டுள்ளார். அதில், “கொலை மிரட்டல் விடும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என தெரியவில்லை. இது வெறும் கிரிக்கெட் தான். அமைதியாக இருங்கள்” என கூறியிருந்தார்.

சைமன் டவுலின் ஃபேஸ்புக் பதிவு.
சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி..!
PHOTOS: மைதானத்தில் அமைதி.. டிரெஸிங் ரூமில் சேட்டை.. தோனியின் அட்டகாசம்!
VIDEO: மைதானத்துக்குள் ஹெலிகாப்டரை இறக்கி துப்பாக்கி முனையில் கால்பந்து வீரர் கடத்தல்!
VIDEO: மிதாலிக்கு பந்துவீசிய ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன்!
இதெல்லாம் ஒரு பிட்ச்சா? டெல்லி ஆடுகளத்தை விளாசிய பாண்டிங்!
ஃபோட்டோவை கிழித்த ஆண்டர்சன்... பதிலடி கொடுத்த அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!
Also Watch...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.