• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • VIDEO | சி.எஸ்.கே-வின் வெற்றியைப் பறித்த ரன் அவுட்!

VIDEO | சி.எஸ்.கே-வின் வெற்றியைப் பறித்த ரன் அவுட்!

கடைசி பந்தில் ரன் அவுட். (BCCI)

கடைசி பந்தில் ரன் அவுட். (BCCI)

#IPL2019: #ShardulThakur's run-out that proved to be game-changer in #RCBvsCSK clash | கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பெங்களூருவுக்கு எதிரான போட்டியின் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியைப் பறித்த கடைசி ரன் அவுட் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் டி-20 தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

அடுத்துக் களமிறங்கிய சென்னை அணியில், முன்னணி வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற கேப்டன் தல தோனி, தனியாளாக போராடினார். எதிரணி பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். 48 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார்.

Dhoni Batting, CSK, IPL
பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட தோனி. (BCCI)


இருப்பினும், ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 4, 6, 6, 2, 6 ரன்கள் அடிக்கப்பட்டன. கடைசி பந்தை தோனி மிஸ் செய்ததால் பைஸ் முறையில் ரன் எடுக்க ஓட மறுமுனையில் இருந்த ஷர்துல் தாகூர் ரன் அவுட்டானார்.



இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுலயும் தோனி தான் நம்பர் 1!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: