HOME»NEWS»SPORTS»cricket ipl 2019 shane watson riles up ishant sharma kagiso rabada during dc vs csk video mu

VIDEO: வாட்சனுடன் மோதிக் கொண்ட இஷாந்த் சர்மா, ரபாடா... பரபரப்பாக இருந்த பெரோஸ் ஷா கோட்லா...!

#IPL2019: #ShaneWatson riles up #IshantSharma, #KagisoRabada during #DCvCSK | வாட்சன் ரன் எடுக்க ஓடும்போது ரபாடா தடுக்க வருவதுபோல் நடந்துகொண்டார்.

VIDEO: வாட்சனுடன் மோதிக் கொண்ட இஷாந்த் சர்மா, ரபாடா... பரபரப்பாக இருந்த பெரோஸ் ஷா கோட்லா...!
ஷேன் வாட்சன் - இஷாந்த் சர்மா மோதல். (IPL)
  • News18
  • Last Updated :
  • Share this:

    டெல்லி பொரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த போட்டியின்போது வாட்சனுடன் மோதிக்கொண்ட இஷாந்த் சர்மா, ரபாடா ஆகியோர் மோதலில் ஈடுபட்டதால் போட்டி முழுவதும் பரபரப்பாகவே இருந்தது.

    ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 5-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே வெற்றி பெற்றது. 26 பந்துகளில் 44 ரன்கள் விளாசிய வாட்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    MS Dhoni, Bravo
    வெற்றிக்குப்பிறகு கைகுலுக்கும் தோனி - பிராவோ. (IPL)


    சி.எஸ்.கே அணியின் பேட்டிங்கின்போது, வாட்சனுடன் மோதிக்கொண்ட இஷாந்த் சர்மா, ரபாடா ஆகியோர் மோதலில் ஈடுபட்டதால் போட்டி முழுவதும் பரபரப்பாகவே இருந்தது. முதலில், அம்பதி ராயுடு ஆட்டமிழந்தபோது இஷாந்த் சர்மா, வாட்சனைப் பார்த்து ஏதோ கூறினார்.

    அதற்கு வாட்சன் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் நடுவர்கள் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சண்டையை முடித்து வைத்தார்.

    அதன்பிறகு, வாட்சன் ரன் எடுக்க ஓடும்போது ரபாடா தடுக்க வருவதுபோல் நடந்துகொண்டார். இதனால், இருவருக்கும் மோதல் முட்டிக்கொண்டது.

    போட்டியின்போது ஆக்ரோசமாக மோதிக்கொண்டாலும், போட்டி முடிந்த பிறகு, வாட்சன், ரபாடா உள்ளிட்டோர் கோபத்தை மறந்து சிரித்து பேசிக்கொண்டனர்.

    அஸ்வின் செய்த அவுட்... எச்சரிக்கை விடுத்த கொல்கத்தா போலீஸ்!

    பேட்டிங்கில் கோலிக்கே அட்வைஸ் சொன்ன அனுஷ்கா சர்மா... வைரலாகும் வீடியோ!

    பிரபல டென்னிஸ் வீராங்கனையை கத்தியால் குத்தியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

    Also Watch...



    Published by:Murugesan L
    First published: