சென்னையை சமாளிக்குமா ராஜஸ்தான்? வெற்றிப்பாதையில் தோனியின் படை!

#IPL2019: #RRVSCSK PREVIEW, Protagonists, Head to Head | கடந்த முறை, சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சென்னையை சமாளிக்குமா ராஜஸ்தான்? வெற்றிப்பாதையில் தோனியின் படை!
தோனி - ரகானே. (BCCI)
  • News18
  • Last Updated: April 11, 2019, 3:17 PM IST
  • Share this:
ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சமாளிக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 25-வது லீக் போட்டியில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இதில், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சென்னை அணி, 6 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.


இரு அணிகளின் பலம் vs பலவீனம்:

ராஜஸ்தான் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களாக ஜோஸ் பட்லர், ஸ்மித் ஆகியோர் உள்ளனர். மூன்று போட்டிகளில் பட்லர் நல்ல ரன்களைச் சேர்த்தார். ஆனால், ஸ்மித் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது. அந்த அணியில் சிறந்த வீரர்களை அடையாளம் காணுவதே சிரமமாக உள்ளது. ரகானே ஓரளவுக்கு ரன்கள் சேர்க்கிறார்.

சஞ்சு சாம்சன் தனது முதல் ஐ.பி.எல் சதத்தை அடித்தார். ஆனால், காயத்தால் சில போட்டிகளில் விளையாடவில்லை. பென் ஸ்டோக்ஸ், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அணியின் பந்துவீசிலும் முன்னேற்றம் காண வேண்டும்.சென்னை அணியின் மிகப்பெரிய பலம் தோனி. இவர் தவிர, டூ பிளெசிஸ் அதிரடி காட்டி மிரட்டுகிறார். அம்பதி ராயுடுவின் ஃபார்ம் கவலை அளிக்கிறது. மற்ற வீரர்கள் ஓரளவுக்கு தங்களது பணிகளைச் செய்கின்றனர். பிராவோ இல்லாதது அணிக்கு பலவீனம். இதுவரை, சென்னை அணி தனது சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தவில்லை.

வெற்றி vs தோல்வி விகிதம்:

இதுவரை, இரு அணிகளும் மோதியுள்ள 20 போட்டிகளில் ராஜஸ்தான் 7-லும், சென்னை 13-லும் வெற்றி பெற்றுள்ளது. சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் 20 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது.

கடந்த முறை, சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பழிதீர்க்கும் முனைப்பில் பல திட்டங்களுடன் ராஜஸ்தான் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

VIDEO: ஹர்திக், பொல்லார்டு உடன் மோதிய பஞ்சாப் வீரர்!

முக்கியமான சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா!

ஐ.பி.எல் லீக் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading