#RRvKXIP | கெயிலின் அதிரடியால் பஞ்சாப் அணி 184 ரன்கள் குவிப்பு!

#RRvKXIP | #ChrisGayle | ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய கெயில், பின்னர் வேகமெடுத்து சிக்ஸர், பவுண்டரி என விளாசத் தொடங்கினார்

Vijay R | news18
Updated: March 25, 2019, 9:44 PM IST
#RRvKXIP | கெயிலின் அதிரடியால் பஞ்சாப் அணி 184 ரன்கள் குவிப்பு!
பஞ்சாப் வீரர் கெயில்
Vijay R | news18
Updated: March 25, 2019, 9:44 PM IST
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி 184 ரன்கள் குவித்தன.

ஜெய்ப்பூரில் நடைப்பெற்று வரும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ராகுல் 4 ரன்களில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து வந்த அகர்வால் 24 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடி வீரர் கெயில் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடினார். பின்னர் வேகமெடுத்த கெயில் சிக்ஸர், பவுண்டரி என விளாச தொடங்கினார்.



கெயிலின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி ரன் குவித்தது. கெயில் 47 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பஞ்சாப் அணி 20 ஓவர்கள்4 விக்கெட் இழப்பிற்கு முடிவில் 184 ரன்கள் குவித்துள்ளது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

Also Watch

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...