தல தோனியின் ஸ்டைலை பின்பற்றும் ரோகித் சர்மா!

வாஷிங்டன் சுந்தருக்கு ஆலோசனை தரும் ரோகித் சர்மா. (MI)

#IPL2019: #RohitSharma Follows #MSDhoni's Style | தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஸ்டைலை, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அப்படியே பின்பற்றுகிறார்.

  ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.

  டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. நேற்று நடந்த போட்டியில் பெங்களூருவை வீழ்த்தி மும்பை அணி பட்டியலில் முன்னேற்றம் கண்டது.

  தோனியைப் பொறுத்தவரை, போட்டி முடிந்ததும் எதிரணியின் இளம் வீரர்களுக்கு இக்கட்டான சூழலில் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரை கூறுவது வழக்கம். அவரின் முக்கியமான ஆலோசனை கேட்க நிறைய வீரர்கள் விரும்புவர்.

  Dhoni Master Class BCCI
  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களுக்கு டியூசன் எடுத்த தல தோனி. (BCCI)


  இந்நிலையில், தோனியின் பாணியை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் பின்பற்றத் தொடங்கியுள்ளார். நேற்றைய போட்டி முடிந்ததும், பெங்களூரு அணியின் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு, ரோகித் சர்மா ஆலோசனை வழங்கினார்.  இந்த வீடியோ, மும்பை இந்தியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

  அரசியலால் பிரிந்து நிற்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!

  பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது மும்பை அணி!
  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  Published by:Murugesan L
  First published: