டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை துல்லியமாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது.
மும்பையில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, இளம் வீரர் ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்களை அடித்து நொறுக்கினார். அதில், தலா 7 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசினார்.

அதிரடி காட்டிய ரிஷப் பண்ட். (DC)
போட்டியின் 17-வது ஓவரை யார்க்கர் மன்னன் பும்ரா அசுர வேகத்தில் வீசினார். அந்த ஓவரின் 3-வது யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் துல்லியமாக ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார். இடது கை பேட்ஸ்மேன் துல்லியமாக ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்தது பார்பதற்கு மிக அழகாக இருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
VIDEO: ஐ.பி.எல் போட்டியில் பும்ராவுக்கு காயம்... உலகக் கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல்?
#IPL2019: சுரேஷ் ரெய்னா முதல் ரிஷப் பண்ட் வரை சில சுவாரஸ்யமான செய்திகள்
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.